Wednesday, August 7, 2013

Operator, Operand என்றால் என்ன?


புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 9

ஒரு PROGRAM எழுதுவதற்கு முன் என்னென்ன அடிப்படை விசயங்களை (PROGRAMMING BUILDING BLOCKS) நாம் அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்பதை கடந்த இரண்டு பாகங்களில் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக அடுத்து OPERATOR என்றால் என்னெவென்று பார்ப்போம்.

OPERATOR:

OPERATOR என்பது ஒரு செயலை குறிக்கும் SYMBOL ஆகும். An operator is a symbol that represents an action.

உதாரணத்திற்கு + என்கிற SYMBOL இரு எண்களை கூட்டுவதற்கு பயன்படுகிறது அல்லவா? எனவே...

+ என்பது OPERATOR; கூட்டல் என்பது அதன் செயல் (ACTION).

OPERAND:  

OPERATOR களை தனியாக கையாள முடியாது. இவற்றை OPERAND டுகளுடன் சேர்த்துதான் பயன்படுத்தமுடியும்.

A + B
10 + 2
10 + A

மேற்கண்டவற்றில் A, B, 10, மற்றும் 2 ஆகியவை OPERAND டுகள் ஆகும்.

OPERATOR வகைகள் (TYPES OF OPERATOR):

ஒவ்வொரு PROGRAMMING LANGUAGE லும் காணப்படும் பிரத்யேகமான OPERATOR களைத் தவிர்த்து அனைத்து PROGRAMMING LANGUAGE லும் காணப்படும் பொதுவான OPERATOR வகைகள் என்னவென்று பார்ப்போம்.
  • ARITHMETIC OPERATORS
  • BOOLEAN OPERATORS
  • RELATIONAL OPERATORS
  • STRING OPERATORS
ARITHMETIC OPERATORS:

இந்த வகை OPERATOR கள் INTEGER OR FLOAT TYPE OPERAND டுகளுடன் பயன்படுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கப்பெறும் RESULT டும் INTEGER OR FLOAT TYPE ஆக இருக்கும்.

கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
முதலியவை ARITHMETIC OPERATORS எனப்படும்.

BINARY OPERATORS:

இந்த வகை OPERATOR களை இரண்டு OPERAND டுகளுடன்தான்  பயன்படுத்தமுடியும். மேலும் அவ்விரண்டுக்கும் மத்தியில் இவ்வகை OPERATOR இருக்கவேண்டும்.

*
முதலியவை BINARY OPERATORS எனப்படும்.

உதாரணம்

A * B
A / B

அதேவேளையில் + மற்றும் இரண்டும் BINARY ஆகவும் UNARY ஆகவும் செயல்படும்.

A + B
A - B

UNARY  OPERATORS:

இந்த வகை OPERATOR களை ஒரு OPERAND டுடன் பயன்படுத்தமுடியும். நிபந்தனை என்னவென்றால் OPERAND க்கு முன்பாக OPERATOR இருக்கவேண்டும்.

+
-
இரண்டும் UNARY OPERATORS ஆகும்.

உதாரணம்

+B
-A

BOOLEAN OPERATORS:

BOOLEAN என்பது TRUE or FALSE என்ற நிலையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் ஒன்றின் நிலையை கண்டுபிடிக்க வேண்டிவரும். அதற்கு இந்த OPERATOR பயன்படுகிறது.

இந்த வகை OPERATOR கள் BOOLEAN TYPE OPERAND டுகளுடன் பயன்படுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கப்பெறும் RESULT டும் BOOLEAN ஆக இருக்கும்.

NOT  (LOGICAL NEGATION)
AND  (LOGICAL CONJUNCTION)
OR  (LOGICAL DISJUNCTION)

முதலியவை BOOLEAN OPERATORS எனப்படும்.

NOT:

இதை LOGICAL NEGATION என்பர். அதாவது ஒரு OPERAND ன் எதிர்நிலையை குறிக்கும். இது UNARY OPERATOR ஆகும்.

உதாரணத்திற்கு நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு விளையாட்டு விளையாடறீங்கன்னு வச்சுக்குவோம். போட்டி நிபந்தனை இதுதான், அதாவது

உங்கள் நண்பர் ஆம் என்றால் நீங்கள் இல்லை என்று சொல்லனும்
அவர் இல்லை என்றால் நீங்கள் ஆம் என்று சொல்லனும்

மாற்றிசொல்லிட்டீங்கன்னா நீங்க தோற்றுவிட்டீர்கள் என்ன போட்டிக்கு ரெடியா? சரி, போட்டியில தோற்கவே கூடாதுன்னா நீங்க NOT OPERATOR ஐ பயன்படுத்தினால்தான் சாத்தியமாகும்.

எப்படி?

NOT OPERAND1

அதாவது

NOT நண்பர்சொன்னது

இங்கே  நண்பர்சொன்னது என்பது OPERAND ஆகும்.
logical negation, not operator, karkandu, boolean operator, karkandu, கற்கண்டு, தமிழ் பதிவு

இப்பொழுது விளையாட்டை ஆரம்பியுங்கள்.

ஆம் (உங்கள் நண்பர் ஆம் என்கிறார்)
NOT ஆம் (நீங்கள் அதன் எதிர் நிலையை சொல்ல NOT ஐ சேர்க்கிறீர்கள்)
RESULT இல்லை (நீங்கள் இல்லை என்கிறீர்கள்)

இல்லை (உங்கள் நண்பர் இல்லை என்கிறார்)
NOT இல்லை (நீங்கள் அதன் எதிர் நிலையை சொல்ல NOT ஐ சேர்க்கிறீர்கள்)
RESULT ஆம் (நீங்கள் ஆம் என்கிறீர்கள்)
புரிஞ்சுதா?

AND:

இதை LOGICAL CONJUNCTION என்பர். அதாவது இரண்டு OPERAND களும் TRUE ஆக இருக்கிறதா என்பதை அறிய பயன்படுத்தப்படும். இரண்டும் TRUE ஆக இருந்தால் மட்டும் RESULT TRUE ஆக கிடைக்கும். இது BINARY OPERATOR ஆகும்.

உதாரணத்திற்கு சைக்கிளை ஓட்டுவதற்கு இரண்டு டயர் டியூபிலும் காற்று இருக்க வேண்டும்தானே. இரண்டிலும் காற்று இருந்தால் மட்டுமே ஓட்டவேண்டும் என்றால் அதை எப்படி முடிவுசெய்கிறீர்கள்? இப்படித்தானே?

முன்சக்கரத்திலும் காற்று இருக்கவேண்டும் அதோடு பின்சக்கரத்திலும் காற்று இருக்கவேண்டும்.

இதற்குத்தான் AND OPERATOR பயன்படுகிறது.
logical conjunction, and operator, karkandu, boolean operator

எப்படி எழுதுவது?

OPERAND1 AND OPERAND2

அதாவது

முன்சக்கரத்தில் காற்று இருக்கவேண்டும் என்பது OPERAND1
பின்சக்கரத்தில் காற்று இருக்கவேண்டும் என்பது OPERAND2

உங்கள் சைக்கிளின் இரண்டு சக்கரத்தினுடைய நிலையை (VALUE வை) இங்கே APPLY செய்யுங்கள்.

உதாரணமாக முன்புற டயரில் காற்று இருக்கிறது ஆனால் பின்புற டயரில் காற்று இல்லை.

இதை

TRUE AND FALSE

என்று போட்டால் இதனுடைய ரிசல்ட் FALSE என்று கிடைக்கும். அதாவது சைக்கிள் ஓட்ட முடியாது என்று சொல்கிறது.

இரண்டிலும் காற்று இருந்தால்?

TRUE AND TRUE

RESULT IS TRUE

சைக்கிள் ஓட்ட முடியும்.
அடுத்து....

OR:

இதை LOGICAL DISJUNCTION என்பர். அதாவது இரண்டு OPERAND களில் ஏதாவது ஒன்று TRUE ஆக இருக்கிறதா என்பதை அறிய பயன்படுத்தப்படும். அப்படி இரண்டில் ஒன்று TRUE ஆக இருந்தால் மட்டுமே RESULT TRUE ஆக கிடைக்கும். இது BINARY OPERATOR ஆகும்.

உதாரணத்திற்கு உங்கள் நண்பருடன் ஹோட்டலுக்கு சாப்பிட போகிறீர்கள். சாப்பிட்டு முடித்ததும் மாவாட்டாமல் வெளியே வரவேண்டும் என்றால் சாப்பிட்டதற்கு காசு கொடுக்கவேண்டும். இதற்கு இருவரிடமே காசு இருந்தாலும் யாராவது ஒருவர் காசு கொடுத்தாலே போதும் வெளியே வந்திடலாம். இருவரிடமே இல்லையென்றால் பிரச்சினைதான். இதற்கு OR OPERATOR பயன்படுகிறது.

எப்படி?

உங்களிடம் காசு இருக்கவேண்டும் அல்லது நண்பரிடம் காசு இருக்கவேண்டும்

OPERAND1 OR OPERAND2

அதாவது

உங்களிடம் காசு இருக்கவேண்டும் என்பது OPERAND1
நண்பரிடம் காசு இருக்கவேண்டும் என்பது OPERAND2

உங்கள் பதிலை (VALUE வை) இங்கே APPLY செய்யுங்கள்.
logical disjunction, or operator, karkandu, boolean operator

RELATIONAL OPERATORS:

இந்த வகை OPERATOR கள் இரண்டு OPERAND டுகளை COMPARE செய்யவும் அவற்றிற்கிடையேயுள்ள RELATION ஐ அறியவும் உதவுகிறது. OPERAND எந்த வகையாக இருந்தாலும் RESULT BOOLEAN ஆக இருக்கும்.

EQUALITY
<> INEQUALITY
> GREATER THAN
>= GREATER THAN OR EQUAL TO
LESS THAN
<= LESS THAN OR EQUAL TO

முதலியவை RELATIONAL OPERATORS எனப்படும். மேலும் இவையனைத்தும் BINARY OPERATOR ஆகும்.

இரண்டும் சமமா?
ஒன்றைவிட மற்றொன்று பெரிதா? போன்றவற்றை அறிய இவை பயன்படுகின்றன.

OPERAND1 RELATIONAL_OPERATOR OPERAND2

உதாரணமாக

10 = 10 ? அதாவது 10 ம் 10 ம் சமமா என்று பார்க்கிறோம். பதில் ஆம் என்று வருகிறது.

TRUE = FALSE ? பதில் இல்லை என்று வருகிறது.

"TAMIL" = "PROGRAM" ? பதில் இல்லை என்று வருகிறது.

10 = 5 ? அதாவது 10 ம் 5 ம் சமமா என்று பார்க்கிறோம். பதில் இல்லை என்று வருகிறது.

10 <> 5 ? அதாவது 10 ம் 5 ம் சமமில்லையா என்று பார்க்கிறோம். பதில் ஆம் என்று வருகிறது.

10 > 5 ? அதாவது 10 என்பது 5 ஐ விட பெரிதா என்று பார்க்கிறோம். பதில் ஆம் என்று வருகிறது.

10 >= 5 ? அதாவது 10 என்பது 5 ஐ விட பெரிது மற்றும் சமமா என்று பார்க்கிறோம். பதில் ஆம் என்று வருகிறது.

10 < 5 ? அதாவது 10 என்பது 5 ஐ விட சிறியதா என்று பார்க்கிறோம். பதில் இல்லை என்று வருகிறது.

10 <= 5 ? அதாவது 10 என்பது 5 ஐ விட சிறியது மற்றும் சமமா என்று பார்க்கிறோம். பதில் இல்லை என்று வருகிறது.

என்ன புரிந்ததா?

STRING OPERATOR:

இந்த வகை OPERATOR கள் STRING TYPE OPERAND டுகளுடன் பயன்படுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கப்பெறும் RESULT டும் STRING TYPE ஆக இருக்கும்.

இணைத்தல்

இது BINARY OPERATOR ஆகும்.

உதாரணமாக இரண்டு வார்த்தைகளை இணைக்க இது பயன்படுகிறது.

OPERAND1 + OPERAND2

'TAMIL ' + 'NADU'

RESULT IS 'TAMIL NADU'

OPERATOR என்றால் என்னவென்று தற்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த OPERATOR களை நமது PROGRAM ல் எப்படி பயன்படுத்துவது என்பதை அடுத்து பார்க்கலாம்.

0 comments:

Post a Comment