Wednesday, August 7, 2013

For Loop எதற்கு பயன்படுகிறது?



Loop என்றால் என்ன என்பதைப் பற்றியும் அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

Loop என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது For Loop தான். எனவே For loop ஐ பற்றியும் அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

நமது program மில் இடம்பெறும் ஒரு சில statement களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் திரும்பத்திரும்ப execute செய்ய for loop பயன்படுகிறது.

இதற்கு ஆரம்ப எண்ணும் முடிவு எண்ணும் அவசியம் குறிப்பிட வேண்டும். எனவே ஆரம்ப எண்ணும் முடிவு எண்ணும் தெரிந்திருந்தால் for loop ஐ பயன்படுத்தி program எழுத முடியும்.

உதாரணத்திற்கு
1 முதல் 10 வரை நம்பரை சொல்ல

அடுத்து, முடிவு எல்லை தெரியாவிட்டால் for loop ஐ பயன்படுத்துவது நல்லது அல்ல.

உதாரணத்திற்கு Esc key ஐ press பண்ணும் வரையில் நம்பரை சொல்ல வேண்டும். இதில் esc key எப்பொழுது அழுத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது. 5 வரை சொல்லிய பிறகும் அழுத்தப்படலாம் அல்லது 5 லட்சம் சொல்லிய பிறகும் அழுத்தப்படலாம்.

For Loop Syntax

1) simple for loop 

FOR counter_variable := start_value TO end_value DO Statement

2) for loop to execute block of statements

FOR counter_variable := start_value TO end_value DO
Begin
   Statement 1
   Statement 2
   and so on
End


3) for loop with incrementor

FOR counter_variable := start_value TO end_value STEP increment_by DO
Begin
   Statement 1
   Statement 2
   and so on

End

முந்தைய பாகத்தில் 10 நம்பரை சொன்னோம் அல்லவா அதை எப்படி for loop ஆக மாற்றுவது?

FOR அந்தஎண் := ஆரம்பஎண் TO முடிவுஎண் DO அந்த எண்ணை சொல்லவும்.

FOR I := 1 TO 10 DO ShowMessage( IntToStr( I ) )

for loop structure, how for loop work, karkandu, கற்கண்டு, loop

மேற்கண்ட படத்தில் for loop structure இருப்பதை காணலாம்.

part 1: இது ஒரேயொரு முறை மட்டும் execute ஆகும். அதாவது for loop ஆரம்பமாகும்போது மட்டும் இது execute செய்யப்படுகிறது. i என்கிற counter variable லில் ஆரம்ப எண் initialize செய்யப்படுகிறது.

part 2: இங்கு counter variable லில் உள்ள value முடிவு எண்ணை விட சிறியது தானா என்பது சோதிக்கப்படுகிறது.

part 3: part 2 வின் result ஆனது true ஆக இருந்தால் இங்கிருக்கும் statement கள் execute செய்யப்படுகிறது. அதாவது counter variable லில் உள்ள value சொல்லப்படுகிறது.

part 4: part 3 execute செய்யப்பட்ட பிறகு counter variable லில் உள்ள value வுடன் 1 கூட்டப்படுகிறது. ஒருவேளை இரண்டிரண்டாக கூட்ட வேண்டுமானால் இங்கே நீங்கள் அதை குறிப்பிட வேண்டும். அடுத்து part 2 வி்ற்கு control போகிறது.

உதாரணத்திற்கு ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஒற்றைப்படை நம்பராக 10 வரை சொல்லவேண்டுமென்றால் விடை எப்படி இருக்கும்?
1
3
5
7
9
இதை நாம் எவ்வாறு கண்டுபிடித்தோம் என்பதை பேப்பரில் எழுதி பின்னர் அதை எப்படி for loop ஆக மாற்றவேண்டும் என்பதை முயற்சி செய்யுங்கள்.

இதற்கு ஒவ்வொருவரும் ஒரு விதமாக விடை காணலாம்

எனக்கு தெரிந்த எளிதான வழி
for i := 1 to 10 step 2 do showmessage( inttostr( i ) )

இதை c++ language ல் இப்படி எழுதலாம்

for ( i = 1; i <= 10; i= i+2 )
{
cout << i ;
}

அதாவது part 4 பகுதியில் இரண்டிரண்டாக கூட்ட வேண்டுமென்று மாற்றியுள்ளதை கவனிக்கவும்.

Nested for loop ஐ பற்றி அடுத்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment