நான் ஒரு புரோகிராமர் அல்லது புரோகிராமர் ஆக ஆசைப்படுகிறேன். ஆனால் லாஜிக்கில் நான் பலவீனமாக இருக்கிறேன், புதிய புதிய ஐடியா எல்லாம் அவ்வளவாக வரமாட்டேங்குது. என்னுடைய கிரியேட்டிவிட்டியை எப்படி நான் வளர்த்துக்கொள்வது என்ற உங்களின் கேள்விக்கான பதிலை இங்கே பார்ப்போம்.
லாஜிக் / ஐடியா / புதுப்புது டெக்னிக்ஸ் / சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?
முதலில் முயற்சி / ஈடுபாடு / கவனம் / பொறுமை தேவை. எந்த ஒரு காரியமானாலும் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் (ஏனோதானோவென்று இல்லாமல்) செய்தால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும். புரோகிராமிங்கின் அடிப்படை தேவையான லாஜிக்குகளை உருவாக்குவதற்கு பொறுமை ரொம்ப அவசியம். அதுவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் உங்களால் அவசரப்பட்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, டென்ஷனான மனநிலையிலோ லாஜிக்குகளை உருவாக்க முடியாது. அத்தா படிக்க சொல்கிறாரே அடுத்த வார பரிட்சைக்கு தயாராகணுமே என்ற டென்ஷனில் உங்களால் அமைதியாக யோசிக்க முடியாது.
முதலில் முயற்சி / ஈடுபாடு / கவனம் / பொறுமை தேவை. எந்த ஒரு காரியமானாலும் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் (ஏனோதானோவென்று இல்லாமல்) செய்தால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும். புரோகிராமிங்கின் அடிப்படை தேவையான லாஜிக்குகளை உருவாக்குவதற்கு பொறுமை ரொம்ப அவசியம். அதுவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் உங்களால் அவசரப்பட்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, டென்ஷனான மனநிலையிலோ லாஜிக்குகளை உருவாக்க முடியாது. அத்தா படிக்க சொல்கிறாரே அடுத்த வார பரிட்சைக்கு தயாராகணுமே என்ற டென்ஷனில் உங்களால் அமைதியாக யோசிக்க முடியாது.
எனவே அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். கையில் பேப்பர் பேனா வைத்துக்கொண்டு மனதில் தோன்றும் எண்ணங்களை குறிப்பெடுத்துக்கொண்டு அதற்கு தேவையான விடைகளை தேடவேண்டும். முயன்றால் உங்களால் சாதிக்க முடியும். அதற்கு மனந்தளராமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
சிந்திக்க தூண்டும் சின்ன சின்ன கேள்விகளை உருவாக்கி பதில் அளியுங்கள்:
அடுத்து கேள்விகளை உருவாக்குங்கள், பின்னர் அதற்கு விடையளிக்க முயலுங்கள். ஒருவேளை நீங்கள் விடையை கண்டுபிடித்து விட்டால்கூட அத்தோடு நிறுத்திவிடாமல் வேறு ஏதேனும் வழியில் அதற்கு விடைகாண முடியுமா என்று யோசியுங்கள். அதுதான் விடை கிடைத்துவிட்டதே பிறகு எதற்கு இன்னொரு வழியை நான் ஆராய வேண்டும் என்று கருதுவீர்களானால் உங்களின் முன்னேற்றத்திற்கு நீங்களே தடையை ஏற்படுத்தி கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஆரம்பத்தில் இது கொஞ்சம் அலுப்பு தட்டுவது போல தோன்றினாலும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் யோசனை செய்து விடைகாணுங்கள். அப்புறம் நீங்கள் கையாண்ட அனைத்து உத்திகளையும் கம்பேர் செய்து பாருங்கள். அதிலிருந்து சிறந்ததை உங்களால் தேர்வு செய்ய முடியும். இப்படி பல்வேறு கோணங்களில் யோசித்து பதில் தேடுவதால் உங்களுடைய லாஜிக் / பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் / யோசிக்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.
அடுத்து உங்களுக்கு விருப்பமான புரோகிராமிங் லாங்குவேஜில் (உதாரணமாக C, Delphi, Visual Basic, Java) சிறிய சிறிய புரோகிராம்களை உருவாக்குங்கள். உதாரணமாக
1. Write a program to find the max, min, average and total of numbers entered by the user.
2. Write a program to accept a string from the user and find the number of vowels and the vowels that got repeated the most.
3. Write a program to accept an array of numbers and sort the same using Bubble Sort Algorithm.
4. Write a program to accept a number from the user and test if it is a Fibonacci number or not.
போன்ற புரோகிராம்களை நீங்களே சுயமாக எழுதுங்கள். பெரிய புரோகிராம்களை செய்யாமல் சின்ன சின்ன (ரொம்ப சிம்பிள் என நீங்கள் கருதும்) புரோகிராம்களை மீண்டும் மீண்டும் எழுதுங்கள். கேள்விகளில் சிறிய மாற்றம் செய்து அதற்கு விடையளியுங்கள். இது உங்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும்.
உதாரணமாக, கொடுக்கப்பட்ட இரண்டு எண்களில் எது பெரியதென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் முதலில் ஆரம்பித்து அதற்கு விடையளித்துவிட்டால், அடுத்து மூன்று எண்களில் எது பெரியது, நான்கு எண்களில் எது பெரியது என்றவாறு கேள்விகளை மாற்றுங்கள். லாஜிக் வளர ஆரம்பித்துவிடும்.
பிறர் எழுதிய புரோகிராம்களை ஆய்வு செய்யுங்கள்:
அடுத்து பிறர் எழுதிய புரோகிராம்களை பார்வையிடுங்கள். இண்டர்நெட்டில் நிறைய கிடைக்கிறது. அவற்றை மனப்பாடம் செய்வது நமது நோக்கமல்ல. மாறாக என்ன நோக்கத்திற்காக அவை எழுதப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். அவர்களுடைய லாஜிக்கை எடைபோடுங்கள். நீங்கள் யோசிக்கும் கோணத்திலிருந்து இன்னொருவர் வித்தியாசமாக யோசித்திருப்பார். அவரின் லாஜிக்கை அலட்சியம் செய்யக்கூடாது. பின்னர் அந்த புரோகிராமை எப்படி மேம்படுத்தலாம் என்று யோசியுங்கள். இப்படி மற்றவர்களின் புரோகிராம்களை அலசும் போது உங்களுடைய திறன் மேம்படும்.
புதிர்களுக்கு விடை அளியுங்கள்:
இதழ்களில் வரும் (கணிதப்) புதிர்களுக்கும், Elementary school (ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள) கணித பாடங்களுக்கும் விடையளியுங்கள். ஆரம்ப கட்டத்தில் விடைகாண நிறைய நேரம் தேவைப்படலாம். கவலைப்படாமல் பழகுங்கள். போகப்போக விரைந்து சிந்திக்கும் ஆற்றல் உங்களிடம் வளரும்.
அடுத்தவர்களுக்கு உதவுங்கள்:
உங்களுடைய லாஜிக் - சிந்திக்கும் ஆற்றல் - மீது உங்களுக்கு நம்பிக்கை வந்த பின்பு அடுத்தவர்களுக்கு உதவுங்கள். பிராப்ளத்திற்கு விடையளிக்க அவர்கள் திணறினால் நீங்கள் உதவிசெய்யுங்கள். அவர்களிடம் உங்களின் ஐடியாக்களை பகிருங்கள், அவர்களுடைய ஐடியாவை கேளுங்கள். இப்படி நீங்கள் பழகப் பழக உங்களின் லாஜிக் வெகுவாக முன்னேறும்.
மாறாக எனக்கு தெரிந்ததை நான் கஷ்டப்பட்டு விடை கண்டதை எப்படி அடுத்தவருக்கு எளிதில் சொல்ல முடியும் என்று நீங்கள் கருதினால் உங்களது வளர்ச்சியும் சேர்த்துதான் தடைபடும். உங்களுக்கு தெரிந்ததை அடுத்தவருக்கு சொல்வதன் மூலம் உங்களின் அறிவும் விருத்தியடையுமே தவிர குறையாது,மேலும் அடுத்தவருக்கும் கற்று கொடுக்கிறீர்கள். இதற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சி தருவதற்காகவே தனி தலைப்பில் நிறைய exerciseகளை நான் தரவிருக்கிறேன். அதில் ஒரு புரோகிராமை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க வேண்டும் என்ற தகவல்கள் இருக்கும். என்னுடைய லாஜிக்கையும் உங்களுடைய லாஜிக்கையும் எடை போடுங்கள். என்னிடம் உள்ளதை விட உங்களிடம் சிறப்பான லாஜிக் தோன்றவும் வாய்ப்புண்டு.
0 comments:
Post a Comment