தைப்பூசத் திருநாள் முருகனுக்கு சிறப்பானதாகும். முருகப்பெருமான் சேனாதிபதியாக நின்று தேவர்களுக்காக அசுரர்களை அழித்தார். தைப்பூசத் தினத்தன்று அவர் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
* சிவபெருமான் பார்வதியுடன், சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள்.
* தேவர்களின் குருவான, பிரகஸ்பதியின் ஜென்ம நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு சிறப்பு வாய்ந்தது.
* வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைப்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார்.
* புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலையில் இருந்தபோது ஈழநாட்டைப் பற்றி நினைத்ததும் இந்த நாளில்தான் என்று கூறப்படுகிறது.
தைப்பூசத் திருநாள் என்பது சிவன், அம்பிகை மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூசம் என்பது நடராஜர் சிவகாமியம் மைக்கு உரிய சிறப்பான நாள் ஆகும். சிவனின் அம்சமே முருகப்பெருமான் என்பதால் இந்த தைப்பூசத் திருநாள் முருகருக்கும் உகந்த தினமாக மாறிப்போனது. அன்றைய தினம் முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.
பக்தர்கள் பலர் மாலை போட்டுக் கொள்வார்கள். மேலும் பலர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பவுர்ணமியுடன் கூடிய தைப்பூசத் திருநாள் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதனால் தான் இந்த தைப்பூசத் தினம் நடராஜர், அம்பிகை, முருகப்பெருமான் ஆகியோருக்கு உகந்த நன்னாளாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் தைப்பூசத் திருநாள் அன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.
ஆனந்த தாண்டவம்......
தைப்பூசம் என்பது தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர திருநாளை குறிக்கும். தை என்ற வாக்கியமானது பல பொருள்படும். தைப்பது, தாளத்தின் ஒரு சொல், மகர ராசி, பூச நாள் என்பன அவற்றில் சில. பவுர்ணமியுடன் கூடிய தைப்பூசத் திருநாள் அன்று தை த தை என்ற தாள லயத்துக்கு ஏற்ற வகையில் அம்பிகையுடன் சேர்ந்து, நடராஜபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார்.
ஆடல் அரசனின் அந்த அருள்தரும் ஆனந்த தாண்டவத்தை வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகள், மூவாயிரவர், தேவர்கள், அடியார்கள் உள்ளிட்ட பலரும் கண்டு பேருவகை அடைந்தனர். பின்னர் ஒவ்வொரு தைப்பூசத் திருநாளிலும், அனைத்து ஆன்மாக்களுக்கும் அருள் செய்யும் வகையில், எக்காலமும் ஆனந்த நடனத்தை நடத்தியருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன் பொருட்டு சிவபெருமானும் உடன்பட்டார்.
தெப்ப உற்சவம்.........
அப்போது சிவபெருமான் கூறியபடி, பொன்னினால் ஆன மகாசபை ஒன்றை தேவர்கள் செய்வித்தார்கள். சிவபெருமான் அன்று முதல் தேவர்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் சிவகாமியோடு தன்னையும், தன் நடனத்தையும் எக்காலமும் தரிசிக்கும் வகையில் கனகசபையிலே தரிசனம் தந்து அருள் செய்து கொண்டுள்ளார்.
தைப்பூசத் திருநாள் அன்று தெப்ப உற்சவம் நடைபெறுவதற்கான காரணம் ஒன்று கூறப்படுகிறது. தேவர்களின் குருவான பிரகஸ்பதி (வியாழ பகவான்) பிறந்த ஜென்ம நட்சத்திரம், பூச நட்சத்திரம் ஆகும். இதற்கு காற்குளம் என்ற பெயரும் உண்டு. கால்+ குளம் என்பதே காற்குளமாயிற்று. இதன் காரணமாகவே தைப்பூசத் திருநாள் அன்று கோவில் தெப்பக்குளங்களில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை செய்ய வேண்டும். காலை கோவில்களுக்கு சென்று வழிபாடு முடித்து விட்டு வந்து பின்னர் காலை உணவு உண்ண வேண்டும். மாலையில் பால், பழங்களை சாப்பிட்டு, முருகனுடைய பாடல்களை பாடியபடி இருக்க வேண்டும். முறைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியம் கைகூடும்.
விரத முறை........
தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை செய்ய வேண்டும். காலை கோவில்களுக்கு சென்று வழிபாடு முடித்து விட்டு வந்து பின்னர் காலை உணவு உண்ண வேண்டும். மாலையில் பால், பழங்களை சாப்பிட்டு, முருகனுடைய பாடல்களை பாடியபடி இருக்க வேண்டும். முறைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியம் கைகூடும்
0 comments:
Post a Comment