கூகுளின் ஜிமெயில் தரும் ஏராளமான பயனுள்ள வசதிகளில் ஒன்று ஜிமெயில் லேப்ஸ்(Gmail Labs). இவற்றை சோதனையில் இருக்கும் வசதிகள் என்று சொல்லலாம். இவை ஜிமெயில்க்காக சோதனை அடிப்படையில் உருவாக்கியது, உங்கள் வேலைகளை எளிதாக்க உதவும் இவற்றை பற்றி பார்ப்போம் இன்று.
Gmail Labs என்றால் என்ன?
ஜிமெயில் தன்னுள்ளேயே ஏராளமான வசதிகளை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு எந்த வகையில் பிரச்சினை வராதவாறு அமைத்து இருக்கும். ஆனால் ஜிமெயில் Labs என்பது Testing இல் இருப்பவை, பல Labs பயனுள்ள வசதிகளை தரும் போதும், சிலவற்றை பலர் விரும்பாமல் போகலாம். அம்மாதிரியான வசதிகளை பயனர் மீது திணிக்காமல், விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு உருவாக்கப்பட்டது.
இவற்றின் செயல்பாட்டை பொறுத்து குறிப்பிட்ட Lab ஜிமெயில் Feature ஆக சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும். இது பயன்படுத்துபவர்களின் Feedback பொறுத்தது.
எப்படி பயன்படுத்துவது ?
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து, Settings >> Labs என்ற பகுதிக்கு வாருங்கள்.
இந்த பகுதியில் உள்ளவை தான் Labs வசதிகள். உங்களுக்கு பிடித்தமானவற்றில் Enable என்பதை கிளிக் செய்தால் அந்த வசதி உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
அதிகம் பயன்படுத்தப்படும் Gmail Labs
நிறைய Labs இருந்தாலும் கீழே உள்ள சில நிறைய பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Undo Send
இதன் மூலம் அனுப்பிய மெயிலை உடனே Cancel செய்து ஏதேனும் தவறு இருந்தால் திருத்தலாம். அதிகபட்சம் 30 நொடிகள் வரை இதை Enable செய்ய முடியும்.
Authentication icon for verified senders
Paypal, eBay என்ற இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல்களுக்கு ஒரு Key Icon கொடுத்து அவை Spam இல்லை உண்மையானவை என்று உங்களுக்கு தெரிவிக்க பயன்படும் வசதி. இதன் மூலம் இந்த இரண்டு தளங்களில் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
Right-side chat
மிக அதிகம் பேர் சாட்டில் இருந்தால் ஆன்லைனில் உள்ள எல்லோரையும் நம்மால் பார்க்க முடியாது. Chat பகுதியை Right Side க்கு மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம். அதற்கு உதவும் வசதி இது.
SMS (text messaging) in Chat
குறிப்பிட்ட நண்பரின் பெயருடன் மொபைல் எண்ணை சேர்த்து SMS அனுப்ப உதவும் வசதி.
Unread message icon
எவ்வளவு மின்னஞ்சல்கள் இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது என்பதை காட்டும் வசதி. இதன் மூலம் வேறு Tab – இல் இயங்கி கொண்டிருந்தால், புதிய மெயில் வரும்போது உடனடியாக கவனிக்கலாம்.
இவை தவிர இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான வசதியை மட்டும் பயன்படுத்துங்கள், எல்லாவற்றையும் பயன்படுத்த முயல வேண்டாம். இதனால் ஏதேனும் ஒரு Lab நீக்கப்பட்டால் உங்கள் இன்பாக்ஸ் Load ஆவதில் பிரச்சினை வரும். தேவையானதை மட்டும் பயன்படுத்தினால் எளிதாக குறிப்பிட்ட ஒன்றை நீக்கலாம், அதிகம் பயன்படுத்தினால் எதில் பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க முடியாது.
ஏதேனும் குறிப்பிட்ட Lab நீக்கப்பட்டு உங்கள் இன்பாக்ஸ் லோட் ஆவதில் பிரச்சினை வந்தால் https://mail.google.com/mail/u/0/?labs=0. என்ற முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து Lab – களையும் Disable செய்யும். பின்னர் Settings >> Labs பகுதியில் குறிப்பிட்ட Lab எது என்று கண்டுபிடித்து நீக்க வேண்டும்.
0 comments:
Post a Comment