சிக்கன் பிரியாணி (எளிய முறை)
தேவையானப் பொருட்கள்: - பிரியாணி அரிசி – 500 கிராம்
- சிக்கன் – 500 கிராம்
- நெய் – 75 கிராம்
- எண்ணெய் – 100 கிராம்
- இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு – 6 பல்
- பல்லாரி – 2
- தக்காளி – 3
- மிளகுப்பொடி – 10 கிராம்
- சீரகப்பொடி – 10 கிராம்
- மஞ்சப்பொடி – அரை தேக்கரண்டி
- கலர் பவுடர் – இரண்டு சிட்டிகை
- கசகசா – 2 தேக்கரண்டி
- முந்திரி – 10
- தேங்காய்பால் – 250 கிராம்
- பட்டை கிராம்பு – ஒரு தேக்கரண்டி அரைத்தது
- மிளகாய்ப்பொடி – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – கொஞ்சம்
- கொத்தமல்லி – கொஞ்சம்
|
செய்முறை: - முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
- வடிக்க போகும்முன் கலர் பவுடர், முந்திரி இரண்டையும் போட்டு வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
- அதன் பிறகு நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
- பிறகு கோழிக்கறியை போட்டு, 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
- பிறகு தேங்காய் பால் 250 மில்லி தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
- இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் தீயைக் குறைத்து மூடி வைத்து வேக விடவும்.
- பிறகு எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
|
0 comments:
Post a Comment