ஆப்லைன்
என்.டி. பாஸ்வேர்ட் - ரெஜிஸ்ட்ரி எடிட்டர் (Offline NT Password &
Registry Editor ) என்னும் டூலைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டர் சிஸ்டம்
ஒன்றின், அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மாற்றி அமைக்கலாம்.
இது
ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று வகையில் அமைக்கப்பட்ட புரோகிராம்
என்பதால், இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இது பழைய பாஸ்வேர்டினை
முழுமையாக அழிக்கிறது.
எனவே,
விண்டோஸ் சிஸ்டம் செல்ல வேண்டியதில்லை. இது எந்தப் பிரச்னையும் இன்றி,
விண்டோஸ் எக்ஸ்.பி., விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில்
செயல்படுகிறது.
இவற்றின் 64 பிட் பதிப்புகளிலும் செயல்படுகிறது. இதற்கு http://pogostick.net/~pnh/ntpasswd/என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.
1. முதலில் இந்த இணைய தளம் சென்று, ”How to get it?” பிரிவில், Password
reset CD/USB bootdisk: Instructions image என்பதனைக் கண்டறிந்து கிளிக்
செய்திடவும். மீண்டும் கீழாகச் சென்று cd110511.zip என்ற பைலைத்
தரவிறக்கம் செய்திடவும். இது ஏறத்தாழ 3 எம்.பி. அளவுள்ள பைலாகும்.
2. இந்த ஸிப் பைலில் இருந்து, ஐ.எஸ்.ஓ. பைலை எக்ஸ்ட்ராக்ட் செய்திடவும். இந்த பைலை, டிஸ்க் ஒன்றில் பதியவும்.
3. அடுத்து, இந்த சிடியினைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கவும்.
4. பூட் கட்டளைப் புள்ளி தோன்றுகையில், எண்டர் அழுத்தவும். புரோகிராம் லோட் ஆகும் வரையில் காத்திருக்கவும்.
5. உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவின் அனைத்து பகுதிகளையும் நீங்கள்
இங்கு காணலாம். இங்கு, விண்டோஸ் லோட் ஆகி உள்ள ஹார்ட் ட்ரைவின்
பகுதியினைத் தேர்ந்தெடுக்கவும். பொதுவாக, மாறா நிலையில், இதுவே முதலாவதாக
இருக்கும். இதில் எண்டர் அழுத்தவும்.
6. விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி உள்ள இடத்தின் சரியான இடம் பெறவும். மாறா
நிலையில், இது Windows/System32/config என்ற பிரிவில் இருக்கும். மீண்டும்
எண்டர் அழுத்தவும்.
7. அடுத்து, Password reset [sam system security] என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். எண்டர் அழுத்தவும்.
8. பாஸ்வேர்ட் ரீசெட் செய்வதற்கான யூசர் நேம் டைப் செய்திடவும். மீண்டும் எண்டர் தட்டவும்.
9. இங்கு யூசர் பாஸ்வேர்டினை நீக்கிட, 1 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். எண்டர் அழுத்தவும்.
10. மேலே காட்டப்பட்டுள்ள அனைத்தையும் எந்த தவறும் இல்லாமல் மேற்கொண்டால்,
ஒரு உறுதி செய்வதற்கான மெசேஜ் ஒன்று காட்டப்படும். மீண்டும் இப்போது ! யை
டைப் செய்து, எடிட்டிங் பணியிலிருந்து வெளியேற எண்டர் தட்டவும்.
11. அடுத்து q அழுத்தி புரோகிராமில் இருந்து வெளியேற எண்டர் அழுத்தவும்.
12. அடுத்து y என அழுத்தி, அனைத்து மாற்றங்களையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள உறுதி செய்திடவும். எண்டர் அழுத்தவும்.
13. மீண்டும் புரோகிராம் செல்ல விருப்பம் இல்லை என்பதனைத் தெரிவிக்க, எண்டர் அழுத்தவும்.
14. இனி, டிஸ்க்கினை நீக்கி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். இனி,
பாஸ்வேர்ட் எதுவும் தராமல், உங்களால், லாக் இன் செய்திட முடியும்.
0 comments:
Post a Comment