Monday, October 28, 2013

உங்கள் காதல் வெற்றி பெறுமா? கை ரேகை ஜோதிட அலசல்



உங்கள் காதல் வெற்றி பெறுமா? நீடிக்குமா? திருமணம் இணையுமா? என்றெல்லாம் அறிய வேண்டும் என்றால் வாருங்கள் ஒரு கை ரேகை ஜோதிட ஆராய்ச்சி செய்யலாம். 

மேலே படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதுதான் காதல் ரேகை. இதற்கு திருமண ரேகை என்றும் ஒரு பெயர் உள்ளது. இந்த படத்தில் காட்டப்பட்டு உள்ளதைப் போல் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள்கூட சிலருக்கு காதல் ரேகையில் இருக்கலாம். 



காதல் ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள்: 

1. எத்தனை ரேகைகள் உள்ளன? 

2. காதல் ரேகையின் நீளம் எவ்வளவு ? 

3. காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ? 

4. காதல் ரேகை இதய ரேகையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அதை இதய ரேகையை நோக்கி நேர் கோடாக இழுக்கின்றபோது சந்திக்கின்ற இடம் எது ? 

5. காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா? 

எந்தக் கையை பார்க்க வேண்டும்? 

நீங்கள் வழக்கமாக எந்த கையை பயன்படுத்தும் பழக்கம் உடையவரோ அந்த கையில்தான் பார்க்க வேண்டும். 

காதல் ரேகைகள் எத்தனை உள்ளன? 

உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை? என்பதை இந்த காதல் ரேகை காட்டி விடும். ஒன்றுக்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட காதல் உறவுகளை குறிக்கும். 

காதல் ரேகையின் நீளம் எவ்வளவு ? 

காதல் ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும்? என தெரிந்து கொள்ளலாம். நீளம் குறைவாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது. 

காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ? 

காதல் ரேகை தடித்து இருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெல்லியதாக இருந்தால் உறவின் ஆழமின்மையை குறிக்கும். 

காதல் ரேகை இதய ரேகையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை சந்திக்கும் இடம் எது? 


காதல் ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது? என்பது முக்கியம். அந்த திரும்பலை அப்படியே நீட்டினால்அது இதய ரேகையை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து எப்போது திருமணம் நடக்கும்? என கணிக்கலாம். 

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா? 

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்ல விடயம் அல்ல. இல்லற வாழ்க்கையில் இடம்பெற கூடிய பிரச்சினைளையே குறிக்கும். இவை இல்லற இன்பம் சம்பந்தமான பிரச்சினைகளாகவோ, மன ஒற்றுமை இல்லாமல் இடம்பெற கூடிய சண்டைகளாகவோ இருக்கும்.

 

மேலே உள்ள படத்தில் Heart Line என குறிப்பிடப்பட்டுள்ளது இதய ரேகை ஆகும். சரி வாசகர்களே உங்கள் காதல் ரேகையை வைத்து உங்கள் காதல் வாழ்க்கையை அறிந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment