விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர். "கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் விளங்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர் இவர்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டு முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர் திருக்குறள் மணக்குடவருரை, தொல் - இளம் பூரணர் மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ் ஆலென் எழுதிய நூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர்.
தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம்...