This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, February 14, 2014

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்.....!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

1. Add Watermarks


குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.

2. Video Converter

நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க

Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.

3. Free Online Radio


VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும்.

இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. RIGHT TO INFORMATION ACT-2005



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005.

அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
நோக்கம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல்கள்
தகவல் என்றால் என்ன? தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே "தகவல்" என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3.
அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5.
சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6.
தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல் பெறுவதன் நன்மைகள்
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
மாநிலத் தகவல் ஆணையம்
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2,தியாகராய சாலை,
ஆலையம்மன் கோயில் அருகில்,
,தேனாம்பேட்டை,
சென்னை- 18.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
மாதிரி விண்ணப்பப் படிவங்கள்




நாம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால்
கீழ்கண்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்.



பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள் !!


பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.
எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். ‘எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்’ என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, “இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்” என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். ‘Idle man’s brain is devil’s workshop’ என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் ‘பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone’ என்பீர்கள்

Thursday, February 13, 2014

ஒரு Website இன் IP அறிவது எப்படி??




1.ஸ்டார்ட் இல் சென்று run என type பண்ணவும் .
2.run இல் click செய்து , run இல் cmd என type பண்ணவும்.
3.enter பட்டன் இணை அழுத்தவும்
4.அதில் ( ping websitename.com/.org/.net etc. )என type பண்ணவும்.அடைப்புகுறி தேவை இல்லை ,பின்னர் enter பட்டன் அழுத்தவும்.
tamilspace.com
("websitename.com" க்கு பதிலாக உங்களுக்கு தேவையான website type பண்ணவும்)

அதில் முதலாவது வசனம் குறிப்பது நீங்கள் தேடிய website இன் IP இணை தான் .
நன்றி.

HOW TO FIND THE IP ADDRESS OF A WEBSITE

1.open run.
2.type 'cmd' without quotes
3.type 'ping websitename.com/.org/.net etc. without quotes

eg:
ping facebook.com

4.note the ip address written on the top most line,now you are done.