சுய விவரங்கள்:
உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை. சிலர் வீட்டு முகவரி முதல், செல்போனின் எண்கள் வரையிலும் ஃபேஸ்புக்கில் போட்டிருப்பார்கள். சிலர் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதை ஷேர் செய்யவேண்டும் என்பதில் கவனம்செலுத்துங்கள்.
இருப்பிடம்:
ஃபேஸ்புக்கில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை 'சுவற்றில்' எழுதும்பொழுது குறிப்பிடமுடியும். அதுவே சில நேரங்களில் சிரமங்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்க!
புகைப்படங்கள்:
ஃபேஸ்புக் பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில் கவனம்தேவை. அதிலும் பெண்கள் என்றால் அதிக கவனம்தேவை. உங்களால் வெளியிடப்படும் புகைப்படங்கள் சில தீயவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சிரமத்தை தவிர்க்க, தெரிந்த நண்பர்கள், ஃபேஸ்புக் பிரைவசி ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
குடும்ப படங்கள்:
உங்களுடைய குடும்ப படங்கள், ஃபேஸ்புக் போன்ற திறந்தவெளி குப்பைமேட்டில் பகிர்வதில் மிகுந்த கவனம்தேவை. மனைவி, குழந்தைகள் படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படியே பயன்படுத்தினாலும் தெரிந்தவர்களுடன் மட்டும் பகிருங்கள்.
நிறுவனங்கள்:
ஃபேஸ்புக்கில் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் பற்றி தவறாக எழுதாதீர்கள். ஒருவேளை அது மற்றவர்களுக்கு உங்கள்மேல் கீழ்த்தரமான என்னத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அம்மாதிரி நிகழ்வுகளை கவனமாக கையாளுங்கள்.
அரசியல்:
அரசியல் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ தவறாக ஃபேஸ்புக்கில் எழுதவேண்டாம். உங்கள்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.