1) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் நேரத்தை கண்டுபிடித்தல்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய உள்ளூர் நேரம் தெரிய வேண்டும் என்றால், பின்வரும் முறையை பயன்படுத்தி நேரத்தை கண்டுபிடிக்கலாம்.
Syntax: time in PLACE
எடுத்துக்காட்டாக : time in Chennai
2) தேடுதலில் தேவைபடாத சொற்களை நீக்குதல்
நீங்கள் கூகிள் வலைப்பக்கத்தில் தேடும் போது தேடலில் ஒரு வார்த்தை தவிர்க்க விரும்பினால் அந்த வார்த்தைக்கு முன்பு - (கழித்தல் குறி) சேர்த்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு ebook கை பற்றி தேடுவதாக வைத்துகொள்வோம், அந்த தேடலில் free என்ற வார்த்தையை கொண்ட தேடலை தவிர்க்க விரும்பினால் free என்ற சொல்லை -free என்று எழுதவேண்டும்.
ebooks -free
3) ~ பயன்படுத்தி ஒரே பொருளில் கொண்ட சொற்கள் மூலம் தேட
கொடுக்கப்பட்ட வார்த்தைக்கு மட்டும் தேடாமல், தேடும் வார்த்தையுடன் அதே பொருள் கொண்ட மற்ற வார்த்தைகளையும் சேர்த்து தேடவேண்டுமெனில், தேடும் வார்த்தைக்கு முன்பு ~ என்ற குறியை பயபடுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு tutorial பற்றி தேடும் போது அதை ஒத்த பொருள் கொண்ட guide, manual, reference வைத்து தேடினால் மேலும் கூடுதலான தேடல் முடிவுகள் கிடைக்கும் எனவே பின்வருமாறு தேடவேண்டும்.
nagios ~tutorial
(or)
debian installation ~tutorial
4) * பயன்படுத்தி எதாவது சொல்லை பொருத்தி தேடுதல்
நீங்கள் எதாவது ஒரு சொற்றொடரை பற்றி தேடும் போது, அதில் ஒரு வார்தையை எப்படி பயன்படுத்தி தேடுவது என்று தெரியவில்லை எனில், அந்த சொல்லுக்கு பதில் * குறியை பயன்படுத்தி தேடலாம்.
உதாரணத்திற்கு vim editor find and replace எசேம்ப்லஸ் என்றும் தேடலாம் அல்லது vim editor search and replace என்றும் தேடலாம். இதற்கு vim editor * and replace என்று தேடும் போது "find" என்ற சொல்லின் தேடலும், "search" என்ற சொல்லின் தேடலும் ஒரு சேர கிடைக்கும்.
குறிப்பு: நீங்கள் * பயன்படுத்தி பல வார்த்தைகளை பொருத்தி தேட முடியும். (google * america* times )
5) OR (||) , AND (&&) என்ற குறியை பயன்படுத்தி தேடுதல்.
கூகுளில் வார்த்தைகள் இடையே OR ஆபரேட்டர் பயன்படுத்தி தேடலாம்.
எடுத்துக்காட்டாக examples OR (அல்லது) programs என்று தேடலாம்.
bash examples OR programs
bash examples || programs
bash examples AND programs
bash examples && programs
6) ஒரு வார்த்தையின் விளக்கத்தை தேடுதல்
ஒரு வார்த்தை விளக்கத்தை காண பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும்.
Syntax: define:
define: tech savvy
7) .. பயன்படுத்தி வரம்பான தேடல்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலை வரம்பில் ஒரு தயாரிப்பு பற்றி தேடுகிறீர்கள் என்றால் பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும் .
Syntax: text $100..$125
PDA $400..$450
8) கூகிள் பயன்படுத்தி கணித கணக்கீடுகள்
பொதுவாக நாம் அலகு மாற்றம் செய்ய சில வலைத்தளங்களை பயன்படுத்துவோம் .இதே வேலையை கூகிள் தேடல் மூலம் கணக்கீடுகள், அலகு மாற்றங்கள் மற்றும் பண மதிப்பு மாற்றங்கள் செய்ய முடியும்.
உங்கள் அறிவியல் கால்குலேட்டரை கூகுள் தேடல் பெட்டியில் பயன்படுத்தலாம்
sqrt(10)
9) கூகிள் பயன்படுத்தி அலகு மாற்றம்
ஒரு கிலோவிற்கு சமமான பவுண்டுகள் பார்க்க. kg in pound
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
km in mile
inch in feet
acre in square feet
sec in ms
kilobyte in byte
10) கூகுளை பயன்படுத்தி பணமதிப்பு மாற்றம் செய்தல்.
உதாரணத்திற்கு அமெரிக்க டாலரின் யூரோ பணமதிப்பை பார்க்க மற்றும் அமெரிக்க டாலரின் ரூபாய் பணமதிப்பை பார்க்க பின்வருமாறு பயன்படுத்தவேண்டும்.
USD in Euro (or) USD in INR
11) ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் உள்ளதை தேட
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளதை பற்றி தேடலாம்
எடுத்துக்காட்டாக ஈகரையில் உள்ள சிரிப்பு என்ற பதிவுகளை பற்றி தேட வேண்டும் எனில் பின்வருமாறு தேட வேண்டும்.
சிரிப்பு site:www.eegarai.net
12) இரட்டை மேற்கோள் (" ") மூலம் ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை தேடுதல்.
நீங்கள் கூகுளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை பற்றிய தேடல் முடிவுகளை பார்க்க விரும்பினால், அந்த சொற்தொடருக்கு முன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் " போட்டு தேட வேண்டும்.
எடுத்துக்காட்டாக
"guide to install php5 from source"
13) கோப்பு வகை கொண்டு தேடல்.
பின்வரும் எடுத்துக்காட்டுகள் பவர் பாயிண்ட் விளக்கம் உள்ள தேடல்களை மட்டுமே காண்பிக்கும்.
அதே போல் நீங்கள் Doc, PDF மற்றும் பிற கோப்பு வகைகள் தேடலாம்.
linux introduction filetype:ppt
14) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் வானிலை அறிதல்
லாஸ் ஏஞ்சல்ஸ் தற்போதைய வானிலை பார்க்க பின்வருமாறு செய்யவேண்டும்.
Syntax: weather PLACE
weather Los Angeles
15) கூகிள் தேடல் பக்கம்
நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேம்பட்ட தேடல் நுட்பங்கள் நினைவில் இல்லை என்றால் கீழே உள்ள, Google மேம்பட்ட தேடல் பக்கம் பயன்படுத்தி பார்க்கலாம்.