This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, August 8, 2013

எளிய தமிழில் SQL - பாகம் 8

How to install Sql Server 2005 Expression Edition?



ஏழாவது பாகத்தில் Relational operators, மற்றும் Logical Operators ஆகியவற்றைப் பார்த்தோம்.

Relational Operatorsல் <, >, >=, <=, =, != , <> போன்றவை வரும்.
Logical Operatorsல் AND, OR, NOT போன்றவை வரும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பானது அதிகமா, குறைவா, சமமா, சமமில்லையா என சோதித்தறிய Relational Operators பயன்படுத்தலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்புபடுத்தி விடைகாண்பதற்கு Logical Operators பயன்படுத்தலாம்.

கணிதச் சமன்பாடுகளை, கூட்டல்,கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் போன்ற கணக்குகளைச் செய்வதற்காக Arithmetic Operators உள்ளன.

அவை :
+ கூட்டல் (Addition)
- கழித்தல் (Subtraction)
* பெருக்கல் (Multiplication)
/ வகுத்தல் (Division)

உதாரணம்:

DECLARE @a int
DECLARE @b int
DECLARE @c int

SET @a = 100
SET @b = 150
SET @c = @a + @b

PRINT @c

மேலே ஒரு எளிய T-SQL நிரல் (Program) ஒன்றைக் கொடுத்துள்ளேன்.
@a, @b, @c ஆகியவை Variable எனப்படும். அதாவது மாறிகள். ஒவ்வொரு மாறிகளுக்கும் தனித்தனி மதிப்புகளைக் கொடுக்கிறோம். அதற்கு SET என்னும் keyword பயன்படும்.
SET @c = @a + @b என்பதில் a, மற்றும் b ஆகிய இரண்டின் மதிப்பையும் + என்கிற கூட்டல் (Addition - Arithmetic Operator) அடையாளத்தைப் பயன்படுத்திக் கூட்டிக் கிடைக்கின்ற விடையை @c மூன்றாவது மாறியில் போட்டுவிடு - என அர்த்தம்.

PRINT @c எனக் கொடுத்ததும் cன் மதிப்பு 250 எனத் திரையில் காட்டும்.

மேற்கூரிய எளிய நிரலில் + எனப்படும் ஒரு Arithmetic Operator பயன்படுத்தியுள்ளோம்.
இது போல எளிய நிரல்களை எழுதிப் பாருங்கள்.

இந்த நிரல்களை எழுதி விடை காண SQL Server Expression Edition 2005ல் நாம் என்ன செய்ய வேண்டும். அதன் வழிமுறைகளைக் காண்போம்.

உங்கள் Authentication எதுவாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்தபிறகு, Connect ஐ அழுத்தவும்.
திரையில் Object Explorer என்னும் ஒரு Window தெரியும்.

அதில் பாகம்-5ல் நாம் ஏற்கனவே உருவாக்கிய Test எனப்படும் Database ஐத் தேர்வுசெய்யவும்.

File ==> New ==> Query with New Connection இதைக் கிளிக்கவும்.

உடனே ஒரு வெள்ளைத் திரை கண் முன்னர் நிற்கும். இதுதான் T-SQLக்கான Editor. இதில் நாம் நிரல்களை எழுதிப் பழகலாம்.

நிரல் எனப்படும் Programஐ எழுதிய பிறகு அதை இயக்கிப் பார்க்க F5 விசையை அழுத்தவும்.

இந்த Programன் விடை கீழே உள்ள சட்டத்தில் 250 எனக் காட்சியளிக்கும்.



இந்த programல் சில இடங்களில் நான் வேண்டுமென்றே தவறு செய்கிறேன். பிழைச்செய்தி எப்படி வருகிறது என்பதைக் காண்பதற்காகத்தான்.
DECLARE @a int
DECLARE @b int
DECLAR @c int ---> தவறு (1) ஒரு E எழுத்தை விட்டுவிடுகிறேன்.

SET @a = 100
SET @b = 150
SET @c = @a + @b

PRINTT @c ----> தவறு (2) ஒரு T எழுத்தை அதிகமாகக் கொடுக்கிறேன்.

இப்போது F5 key ஐ அழுத்தி விடையை எதிர்பார்த்தால் என்ன கிடைக்கிறது?

Msg 102, Level 15, State 1, Line 3
Incorrect syntax near 'DECLAR'.
Msg 137, Level 15, State 1, Line 6
Must declare the scalar variable "@b".
Msg 137, Level 15, State 2, Line 7
Must declare the scalar variable "@b".


எந்தெந்த வரிகளில் பிழைகள் என்பதைக் கீழே உள்ள சட்டத்தில் காட்டிவிடும். பிழைகளைச் சரிசெய்தபிறகுதான் விடை கிடைக்கும்.

இன்றையத் தேதி என்னவென்பதை T-SQL வாயிலாக எப்படிக் கண்டுபிடிப்பது?

DECLARE @today datetime
SET @today = getdate()
PRINT @today

இங்கே @today என்பது ஒரு மாறி (Variable). அதனுடைய Data Type ஆனது datetime வகையைச் சேர்ந்தது. 

getdate( ) என்பதை Function என்போம். இந்த Function ஆனது இன்றைய தேதிநேரத்தைக் கண்டறிய உதவும். அதை @today ல் பதிந்துவிடும்.


PRINT @today எனக் கொடுத்ததும் கிடைத்த விடை :
Jan 30 2009 11:32PM

இதை மிகச் சுருக்கமாக : PRINT getdate( ) என்றும் கொடுக்கலாம்.


குறிப்பு : எழுதிய program ஐ இயக்கி / ஓட்டி / run / execute செய்து பார்ப்பதற்கு F5 விசையை keyboardல் அழுத்த வேண்டும். 

எளிய தமிழில் SQL - பாகம் 7

ஏற்கனவே பதிந்துள்ள தகவல்களைத் தேடி எடுக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள அடையாளங்களைப் பயன்படுத்தி வடிகட்டலாம். மில்லியன் கணக்கில் பதிந்திருக்கும் recordsல் இருந்து குறிப்பிட்ட சில rows (records) ஐ மட்டும் நமது தேவைக்காகத் தேடி எடுக்கும் செயலுக்குத் துணைபுரிபவை Queries ஆகும். DQL என்றால் Data Query Language.


இதற்கு SELECT எனப்படும் கட்டளையைப் பயன்படுத்துகிறோம். SELECT என்றால் தேர்வு செய் என அர்த்தம். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தகவல்களில் இருந்து நமது தேவைக்கேற்ற தகவலை மட்டும் தேடியெடுத்துத் தருவதற்கு SELECT ஐப் பயன்படுத்தலாம்.

ஒரு மிக மிக எளிய உதாரணம் ஒன்று.

முன்பெல்லாம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளின்போது மாலைப்பதிப்பு நாளிதழ்களான மாலைமுரசு, மாலைமலர் போன்றவற்றில் தேர்வில் தேரியோரின் எண்கள் வெளிவரும். பின்பு காலைப்பதிப்பிலும் வேறு வேறு நாளிதழ்களில் வெளிவரும். இன்றும் கூட இது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

6,75,643 மாணவர்கள் தேர்வெழுதினார்கள் எனில் அதில் 80% தேர்வாகி இருந்தால் 540514 பேர்களின் எண்கள் கல்விமாவட்ட வாரியாக நாளிதழில் வெளியாகி இருக்கும். இதில் ஒவ்வொருவரின் எண்ணும் வந்திருக்கிறதா? இல்லையா? என பட்டிமன்றமே நடக்கும்.

ஆனால் தற்போது தேர்வு அறிக்கைகளும், தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியிடுகிறார்கள். நாம் நமது பதிவெண்ணை மட்டும் கொடுத்தால் உடனே முடிவுகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளோம் என்பது முதற்கொண்டு நொடிகளில் திரையில் காட்சியளிக்கிறது.இது எவ்வாறு சாத்தியம்?

6,75,643 பேர்களின் தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொரு record (row) ஆக கணினியில் உள்ள Databaseல் ஏற்றிவிடுவார்கள். இதற்கு ஒரு குழு இயங்கும். அவர்கள் ஒவ்வொருவரின் பதிவெண், பள்ளியின் பெயர், பாடங்கள், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண்கள் பெறப்பட்டன போன்றவற்றை Databaseல் ஏற்றிவிடுவார்கள். இந்த குழு மின்னல் வேகத்தில் தகவல்களை ஏற்றிவிடும் வல்லமை கொண்டது.

எல்லோருடைய தகவல்களும் ஒட்டுமொத்தமாக Databaseல் ஏற்றப்பட்டவுடன் முடிவு அறிக்கைத் தேதியை வெளியிடுவார்கள்.

தேர்வு முடிவு நாள் அன்று நாம் என்ன செய்கிறோம். நமது பதிவெண்ணையோ / நண்பர்கள் / உறவினர்களின் பதிவெண்ணையோ மட்டும் கணினியில் உள்ளிடுகிறோம்.

எனது நண்பரின் பதிவெண் 059169 எனக் கொண்டால், இந்தக் குறிப்பிட்ட 059169 என்கின்ற எண்ணை 6,75,643 பேர்களின் தகவல்கள் அடங்கிய Databaseல் இருந்து நொடிகளில் தேடியெடுத்துவிடும் வல்லமை SELECT கட்டளைக்கு உண்டு.

எனது பதிவெண்ணுக்காக ஏற்கனவே என்ன தகவல்கள் ஏற்றப்பட்டிருக்கிறதோ அனைத்தையும் திரையில் காணலாம். இந்தத் தேடியெடுத்துத் தருவதுதான் QUERY எனப்படுகிறது.

இதற்காக SELECT கட்டளையுடன் உறுதுணையாக உதவுவதற்குப் பயன்படுபவையே Operators ஆகும்.

Operatorsகளையும் அவற்றிற்கான பயன் மற்றும் குறுவிளக்கம் : கீழே

059169 எண்ணுக்கு உரிய தகவல்களை எனக்காகக் காண்பி = Equal

தேரியோர்களை மட்டும் காண்பி = Equal

தேராதவர்களைக் காண்பிக்காதே <> Not equal

80%க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியோர் யார் யார்? > Greater than

50%க்குக் கீழே வாங்கியோர் யார் யார்? <= Less than or equal

34 மதிப்பெண்கள் அல்லது அதைவிடக் கீழே எடுத்தவர்கள் யார் யார்?<= Less than or equal கணக்குப் பாடத்தில் 80லிருந்து 100க்குள் எத்தனை பேர் மதிப்பெண்கள் எடுத்தனர் BETWEEN Between an inclusive range ஒரு குறிப்பிட்ட எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களையுடையவர்கள் யார் யார்? LIKE Search for a pattern குறிப்பிட்ட SET { } க்குள் அகப்படும் தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு வா IN If you know the exact value you want to return for at least one of the columns இது போக AND, OR, NOT எனப்படும் மூன்று முக்கிய Operators உள்ளன. இவற்றின் பயன் என்னவென்றால் தேடியெடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்துவதே. இத்தனை லட்சம் தகவல்களில் நமக்குத் தேவைப்படும் தகவல்களை மட்டும் வடிகட்டி எடுப்பதற்கு இந்த Operators தான் காரணம். AND -- தேடும்போது எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறோமோ, அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் சம்மதிக்கக் கூடிய தகவல்களை மாத்திரம் எடுத்து வருவதற்கு. உதாரணம்: 5 பாடங்களில் அனைத்துப் பாடங்களிலும் தேரியிருந்தால் மட்டுமே மாணவர் அடுத்த வகுப்புக்குச் செல்லும் தகுதியடைகிறார். அதாவது அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் சம்மதித்திருக்கிறார். கட்டுப்பாடுகள் என்பதை Condition என்பதற்காகக் கொடுத்திருக்கிறேன். 5 Conditions இருக்கின்றன. அனைத்து Condition களும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதுவே AND Operatorன் வெற்றியை உறுதிப்படுத்தும். OR -- தேடும்போது இந்தக் கட்டுப்பாடோ அல்லது வேறொன்றோ எதாவது ஒன்றுக்குச் சம்மதிக்கக் கூடிய தகவல்களைக் கொணர்வதற்கு. 5 பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சியடையாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக மாணவரானவர் தேர்வில் தவறிவிட்டார். இதற்கு OR. இந்தப் பாடம் அல்லது அந்தப் பாடம், அல்லது வேறொன்று எதாவது ஒன்றில் தேர்வடையாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக FAIL எனக் குறிப்பிட OR பயன்படுத்தலாம். 5 Conditionsல் ஏதேனும் ஒரு Condition மட்டும் Satisfy ஆனாலே ORன் வெற்றி தீர்மாணிக்கப்பட்டு விடுகிறது. NOT - எந்தக் கட்டுப்பாடு விதிக்கிறோமோ அதற்கு முரண்பாடான தகவல்களைப் பெறுவதற்கு. உதாரணமாக தேர்வில் தேறாதவர்களை மட்டும் காண்பி. இதற்கு NOT உதவும். AND, OR, NOT இவற்றை தர்க்க ரீதியிலான செயல்பாடுகள் என்போம். அதாவது Logical Operators. நீ தவறைச் செய்தால் தண்டிக்கப்படுவாய் - நேர்மறை. நீ தவறைச் செய்யாவிட்டால் தண்டிக்கப்படமாட்டாய் -- இந்த மாதிரி இடங்களில் NOT பயன்படுத்தலாம்.

= Equal
<> Not equal
> Greater than
>= Greater than or equal
<= Less than or equal
BETWEEN Between an inclusive range
LIKE Search for a pattern
IN If you know the exact value you want to return for at least one of the columns

எளிய தமிழில் SQL - பாகம் 6



DQL: SELECT
DML: DELETE, INSERT, UPDATE
DDL: CREATE, DROP, TRUNCATE, ALTER
TCL: COMMIT, ROLLBACK, SAVEPOINT
DCL: GRANT, REVOKE

மேலே சில கட்டளைகளை (Commands)கொடுத்துள்ளேன். இந்தக் கட்டளைகள் மூலம் Databaseஐ நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

DQL என்பது Data Query Language. ஒரு Databaseன் Tableல் ஏற்கனவே நாம் பதிந்துவைத்துள்ள தகவல்களை தேடி எடுப்பதற்கு. உதாரணமாக 1000 rows இருப்பதாகக் கொள்வோம். அதில் குறிப்பிட்ட சில rows மட்டும் நமக்குத் தேவையெனில் அவற்றை மட்டும் தேடி எடுக்க DQL . இதற்காக SELECT என்கிற கட்டளை பயன்படும்.

DML என்பது Data Manipulation Language. ஏற்கனவே பதிந்துவைத்திருக்கும் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்த, அழிக்க, உருவாக்க. (தகவல்களைத் தான் மாற்றுகிறதே ஒழிய ஒரு Tableன் Structureல் எந்த மாற்றமும் நிகழாது).

DDL என்பது Data Definition Language. புதிய Database (அ) Table போன்றவற்றை உருவாக்க. அதாவது Tableன் Structure ஐ உருவாக்க, ஒட்டுமொத்த Table ஐயுமே அழிக்க, மாற்றங்கள் செய்ய. ஒரு குறிப்பிட்ட Column ன் Data Type ஐ மாற்ற.புதிய Column ஐ உருவாக்க, தேவையற்ற Column இருப்பின் அதை நீக்க.

TCL என்றால் Transaction Control Language. ஒரு நிரலை இயக்கும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், பிழை ஏற்படுவதற்கு முன்னர் வரை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அவையனைத்தையும் நிராகரித்து முந்தைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு.

TCL பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

உதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட Database அல்லது Tableகளில் நாம் ஒரு குறிப்பிட்ட Program ஐ இயக்குவதாகக் கொள்வோம். ஒரு Tableல் உள்ள ஒரு மதிப்பைக் கழித்து (முதலாவது செயல்), அடுத்த Tableல் உள்ள ஒரு குறிப்பிட்ட மதிப்புடன் கூட்டச் செய்ய(இரண்டாவது செயல்) முயற்சிக்கிறோம்.

முதல் செயல் நல்லபடியாக நிறைவுற்றுவிடுகிறது. ஆனால் இரண்டாவது செயல் நிறைவேறுவதற்கு முன்னர் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு நிகழ்ந்தால் என்ன ஆகும்?

முதலாவது Tableல் அந்த மதிப்பு கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் கோளாறு காரணமாக இரண்டாவது Tableல் அந்த மதிப்பு கூட்டப்பட்டு இருக்காது.

அப்படியெனில் இதை ஒரு சரியான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. முதலில் கழிக்கப்பட்ட மதிப்பை reverse செய்து , தலைகீழாக மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும். அப்போதுதான் முறையான நிகழ்வு.

நல்ல உதாரணம் ஒன்று:

உங்களது வங்கியின் ATM அட்டையை, ATM இயந்திரத்தில் செருகி பணம் எடுக்க முயற்சிக்கிறீர்கள். எத்தனை ரூபாய் பணம் என்பதையும் தட்டிவிட்டீர்கள். இயந்திரமானது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. திடீரென்று கோளாறு. Battery down - Power Cut. ஏதோ ஒரு கோளாறு. என்ன ஆகும்?

பணம் உங்கள் கைக்கு வராது.

உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுக் கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் உங்கள் கைக்குப் பணம் வந்திருக்காது. இப்படியே விட்டுவிட்டால் முறையாகுமா?

இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் உதவுவதுதான் Transaction Control. TCL ன் பணி என்னவென்றால் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கும்போது அதைத் தலைகீழாக ஆக்கி, reverse செய்து (Undo) ஒட்டுமொத்த செயல்களையும் பழைய நிலைக்கு ஆக்குவதே.

TCL இருப்பதால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணமானது, இயந்திரக்கோளாறு ஏற்பட்ட உடனேயே, தலைகீழ் இயக்கத்தால் திரும்ப உங்கள் accountல் சேர்க்கப்பட்டுவிடும்.

(இது எனக்கு இரண்டுமுறை நடந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த TCL இயக்கத்தால் பணம் பரிபோகாமல் தப்பித்தது.)


1) எந்தப் பிழையும் நிகழாமல் இருக்கும்போது ஒட்டுமொத்த நிரலும் நல்லபிள்ளையாக இயங்கி பரிவர்த்தனையை ஒழுங்காக நிறைவு செய்யும்.

2) ஏதேனும் பிழை ஏற்பட்டால் உடனே நிரலானது தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு, அதுவரை செய்யப்பட்ட இயக்கத்தை reverse செய்து தகவல் இழப்பைத் தடுத்துவிடுகிறது.

முந்தைய பாடத்தில் Authorization பற்றிப் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு ஒரு Databaseஐப் பார்வையிட மட்டும் அனுமதிக்க DCL உதவும்.

DCL என்றால் Data Control Language. ஒரு குறிப்பிட்ட பயனர் உருவாக்கிய Database,Table களின் உரிமங்களை அடுத்த பயனாளருக்கு விட்டுத்தருவதற்கு. அல்லது அடுத்தவருக்கு விட்டுத்தந்த சலுகைகளை நிராகரிப்பதற்கு.

GRANT என்றால் சலுகைகளை வழங்குவது. உரிமங்களை வழங்குவதற்கு.

REVOKE என்றால் கொடுத்த சலுகைகளை / உரிமைகளைத் திரும்பப் பெருவதற்கு.

DROP என்பது ஒட்டுமொத்த Database (அ) Table ஐ அழிப்பதற்கு (தகவலும், Structureம் அழிந்துவிடும்).

TRUNCATE என்பது தகவல்களை மட்டும் அழிப்பதற்கு (Structure அழியாது).

SELECT பதியப்பட்ட தகவல்களைத் தேடித் தருவதற்கு

INSERT புதிய rowவை உருவாக்க
UPDATE பழைய rowன் தகவலை மாற்றுவதற்கு
DELETE பதிந்திருக்கும் row / rows ஐ அழிப்பதற்கு

CREATE புதிய Database / Table ஐ உருவாக்க 

எளிய தமிழில் SQL - பாகம் 5

SQL
Server 2005 Express Edition ஆனது Microsoft நிறுவனத்தால்வழங்கப்படும் ஒரு
இலவச மென்பொருள். இதை நீங்கள் Microsoft தளத்திலிருந்து இந்த Link

Database ல் நாம் என்ன செய்யப்போகிறோம்?

CRUD என்கிற Create, Read, Update, Delete இந்தச் செயல்களைத்தான் செய்யப்போகிறோம்.

MySQL ஐ Sun Micro System வாங்கிவிட்டாலும் அதன் MySQL Community Server ஐ இலவசமாகவே வழங்குகிறது. அதைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே

ஆனால்MySQL
Enterprise Edition ஆனது இலவசமன்று. நான் அலுவலகத்திலும்,வீட்டிலும் SQL
Server 2005ன் Express Edition தான் பயன்படுத்துகிறேன்.

இந்தமென்பொருளை
நிறுவும்போது Administratorக்கான User name, passwordமுதலியவற்றைக்
கேட்கும். அவற்றைக் கொடுக்கவும். மேலும் அவற்றை நினைவில்கொள்ளவும்.

முறைப்படி நிறுவிய பிறகு Sql Server Express ஐ இயக்கவும். இதற்கு ஒரு குறுக்குவழியாக Start ==> Run ==> SQLWB எனக் கொடுத்தால் உடனே பயன்பாட்டின் முதல் திரை கண்முன்னே நிற்கும்.

பாதுகாப்புகாரணங்களுக்காக
உங்களிடம் பயனர் கணக்கையும், கடவுச்சொல்லையும் (User name& password)
எதிர்பார்க்கும். Install செய்யும்போது என்னகொடுத்தீர்களோ அதைக் கொடுத்து
உள்ளே செல்லலாம்.

நிறுவும்போதேஎந்தவிதமான நுழைவாயில் என்பதைக்
கூறிவிடுங்கள். அதாவது Authenticationஆனது Windows Authentication அல்லது
SQL Server Authentication இரண்டில்எதோ ஒன்றா? அல்லது இரண்டுமா? என்பதைக்
கூறிவிடவும்.

Authentication என்றால் என்ன?
சரியானபயனர்
பெயரும், Passwordம் கொடுத்தால் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும்செயல். என்
வீடு பூட்டியிருக்கிறது. வீட்டிற்கு இரண்டு சாவிகள். ஒன்றுஎன்னிடமும்,
மற்றொன்று மகனிடம் உள்ளது. சரியான சாவியைப் போட்டு நானோஅல்லது மகனோ
திறக்கலாம். தவறான சாவியைப் பிரயோகம் செய்தால் வீட்டைத்திறக்க இயலாது.
இதுவே Authentication எனப்படும். முறையான User Nameமற்றும் Password
கொடுக்கும் செயல்.

Authorization என்பது என்ன?
ஒருஅலுவலகத்தில்
30 பேர் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில்அனுபவ முதிர்ச்சி
கொண்டவர், தற்போதுதான் கல்வியை முடித்து முதன்முதலாகவேலைக்கு வருபவர்,
அனைவருக்கும் மூத்த தலைவர் எனப் பலவித பணியாளர்கள்இருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. இதில் யாருக்கு அதிக சிறப்புஉரிமைகள்
கொடுக்கப்படுகின்றன, யாருக்குப் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன -என்பதே
Authorization ஆகும்.

Chess விளையாட்டில் சிப்பாய்,மந்திரி, யானை,
குதிரை, அரசன், அரசி என அனைவருக்கும் ஒவ்வொரு உரிமைகள்இருக்கும்.
ஒருவருக்கு இருக்கும் சிறப்பு உரிமைகள் அடுத்தவருக்குஇருக்காது. அதுதான்
Authorization.

Authentication செயலானது முடிந்தபிறகு Authentication சரிபார்க்கும் செயல் நடைபெறும்.

Administrator என்பவருக்கு மிக அதிக உரிமை. இது போல ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொருவிதமான உரிமைகள். இதை Role என்பார்கள்.

நமது கணினியில் நாமே நிறுவிக்கொள்கிறோம். அதனால் பெரும்பாலும் நாம் இதில் Windows Authentication ஐத் தேர்வு செய்யலாம்.

SQLServer
Authentication கொடுத்தால் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லைக்கொடுத்து உள்
நுழையவேண்டி வரும். அல்லது அதை சேமித்து வைக்கும்
வசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் Authentication எதுவாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்தபிறகு, Connect ஐ அழுத்தவும்.

வாயிலாக இறக்கிக்கொண்டு நிறுவிக்கொள்ளவும். எல்லா Database களுமே அவற்றின்
கட்டமைப்பில் கிட்டத்தட்ட சமானமாகவே இருக்கின்றன. சொடுக்கவும்.திரையில் Object Explorer என்னும் ஒரு Window தெரியும்.


அதில் Databaseல் Right Click செய்து New Database ஐ click செய்யவும்.

புதியசட்டத்தில்
Databaseக்கான பெயர் கொடுக்கவும். நான் Test எனக்கொடுத்துள்ளேன். பிறகு OK
கொடுத்தால் Test என்கிற பெயரில் ஒரு Databaseஉருவாகிவிடும்.
Testஎன்கிற
இடத்தில் இருக்கும் + Expand ஐ அழுத்தினால் அதில் DatabaseDiagrams,
Tables, Views, Synonyms, Programmability, Service Broker,Storage,
Security எனப் பல இருக்கும்.
அதில்Table
ல் வைத்து Right click செய்து New Table ஐத் தேர்ந்தெடுக்கவும்.இதில்
Column Name, Data Type, Allow Nulls ஆகியவை இருக்கும். உங்கள்Tableன்
Sturctureக்குத் தகுந்தாற்போல ஒவ்வொரு Column களையும்கொடுக்கவும்.
Person#, Name, City என மூன்று Columnகள்
உதாரணத்திற்குக்கொடுத்திருக்கிறேன்.
பின் இதை Save செய்வதற்கு, Ctrl + S வழமை போலக் கொடுத்து Table க்காக ஒரு பெயர் சூட்டுங்கள். (MyList எனக் கொடுத்துள்ளேன்)
பிறகு இதை Close செய்யலாம். இப்போது உங்கள் Tableன் Structure ஆனது Save செய்யப்பட்டுவிட்டது.

இப்படி உருவாக்கிய Tableல் நமது தகவல்களை ஏற்றுவது எப்படி?
Tables க்கு அருகில் இருக்கும் + அடையாளத்தைச் சொடுக்கி expand செய்தால், dbo.MyList ஐக் காணலாம்.
 அதில் Right Click செய்து, Open Table ஐத் தேர்ந்தெடுக்கவும்.
பிறகு அதில் ஒவ்வொரு Row வாகத் தகவல்களை உள்ளீடு செய்யலாம். நான் 5 rowக்களை இதில் ஏற்றிவிட்டேன்.


பதிந்தது போதும் என நினைக்கும்போது அந்த tab ல் வலது க்ளிக் செய்து Close அழுத்திவிடலாம்.
இதுவரையில்இங்கே
நாம் GUI எனப்படும் Graphical User Interface வாயிலாக ஒருDatabaseம்,
அதில் ஒரு Tableம் உருவாக்கி, அதில் புதிய தகவல்களை எப்படிப்பதிவது
என்றும் கண்டோம்.