சி-மொழியைப் படைத்த கணிப்பொறி வல்லுநர், டென்னிஸ் எம்.ரிட்சி (Dennis M. Ritchie) என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சி-மொழி உருவான வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அதன் வரலாற்றையும் சிறப்பையும் அறிந்து கொண்டாலே அந்த மொழியைக் கற்க வேண்டும் என்னும் ஆசை தானாக வரும். சி-மொழியின் நுணுக்கங்களைக் கற்றறிவதற்கு முன்பாக அது தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்ப்போம். சி-மொழிக்கு முன்னால் 1950-1960: உயர்நிலைக் கணிப்பொறி மொழிகள் (High Level Languages) பல...