This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, November 8, 2012

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

         


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
——————————————————————————– முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
——————————————————————————–
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
——————————————————————————–
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
——————————————————————————–
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
——————————————————————————–
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
——————————————————————————–
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
——————————————————————————–
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
——————————————————————————–
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
——————————————————————————–
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
——————————————————————————–
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————– முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

——————————————————————————–
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
——————————————————————————– பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
——————————————————————————–
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
——————————————————————————– தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
——————————————————————————– தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

நன்றி:தமிழ் தந்த சித்தர்கள்

தமிழ் நாடு STD CODES

தமிழ் நாடு STD CODES

tamil nadu

City சிட்டி STD Code
AMBASAMUDRAM அம்பாசமுத்திரம் 4634
ANAMALI ஆனைமலை 4253
ARAKANDANALLUR அரகண்டநல்லூர் 4153
ARANTANGI அறந்தாங்கி 4371
ARAVAKURICHI அரவக்குறிச்சி 4320
ARIYALUR அரியலூர் 4329
ARKONAM அரக்கோணம் 4177
ARNI ஆரணி 4173
ARUPPUKOTTAI அருப்புக்கோட்டை 4566
ATTUR ஆத்தூர் 4282
AVANASHI அவிநாசி 4296
BATLAGUNDU வத்தலக்குண்டு 4543
BHAVANI பவானி 4256
CHENGALPATTU செங்கல்பட்டு 44
CHENGAM செங்கம் 4188
CHENNAI சென்னை 44
CHIDAMBARAM சிதம்பரம் 4144
COIMBATORE கோயம்புத்தூர் 422
CUDDALORE கடலூர் 4142
CUMBUM கம்பம் 4554
DENKANIKOITAH தேன்கனிக்கோட்டை 4347
DEVAKOTTAI தேவக்கோட்டை 4561
DHARAMPURAM தாராபுரம் 4258
DHARMAPURI தர்மபுரி 4342
DINDIGUL திண்டுக்கல் 451
ERODE ஈரோடு 424
GINGEE செஞ்சி 4145
GOBICHETTIPALAYAM கோபிசெட்டிபாளையம் 4285
GUDALUR கூடலூர் 4262
GUDIYATHAM குடியாத்தம் 4171
HARUR அரூர் 4346
HOSUR ஓசூர் 4344
JAYAMKONDAN ஜெயங்கொண்டம் 4331
KALLKURICHI கள்ளக்குறிச்சி 4151
KANCHIPURAM காஞ்சிபுரம் 44
KANGAYAM காங்கேயம் 4257
KARAIKAL காரைக்கால் 4368
KARAIKUDI காரைக்குடி 4565
KARUR கரூர் 4324
KEERANUR கீரனூர் 4339
KODAIKANAL கொடைக்கானல் 4542
KODUMUDI கொடுமுடி 4204
KOTAGIRI கோத்தகிரி 4266
KOVILPATTI கோவில்பட்டி 4632
KRISHNAGIRI கிருஷ்ணகிரி 4343
KULITHALAI குளித்தலை 4323
KUMBAKONAM கும்பகோணம் 435
KUZHITHURAI குழித்துறை 4651
MADURAI மதுரை 452
MADURANTGAM மதுராந்தகம் 44
MANAMADURAI மானாமதுரை 4574
MANAPARAI மணப்பாறை 4332
MANNARGUDI மன்னார்குடி 4367
MAYILADUTJURAI மயிலாடுதுறை 4364
METTUPALAYAM மேட்டுப்பாளையம் 4254
METTURDAM மேட்டூர் அணை 4298
MUDUKULATHUR முதுக்குளத்தூர் 4576
MULANUR மூலனூர் 4202
MUSIRI முசிறி 4326
NAGAPATTINAM நாகப்பட்டினம் 4365
NAGARCOIL நாகர்கோவில் 4652
NAMAKKAL நாமக்கல் 4286
NANGUNERI நாங்குநேரி 4635
NATHAM நத்தம் 4544
ODDANCHATRAM ஒட்டன்சத்திரம் 4553
OMALPUR ஓமலூர் 4290
OOTACAMUND உதகமண்டலம் 423
ORATHANAD ஒரத்தநாடு 4372
PALACODE பாலக்கோடு 4348
PALANI பழனி 4545
PALLADUM பல்லடம் 4255
PAPANASAM பாபநாசம் 4374
PARAMAKUDI பரமக்குடி 4564
PATTUKOTTAI பட்டுக்கோட்டை 4373
PERAMBALUR பெரம்பலூர் 4328
PERUNDURAI பெருந்துறை 4294
POLLACHI பொள்ளாச்சி 4259
POLUR போளூர் 4181
PONDICHERRY பாண்டிச்சேரி 413
PONNAMARAVATHI பொன்னமராவதி 4333
PONNERI பொன்னேரி 44
PUDUKKOTTAI புதுக்கோட்டை 4322
RAJAPALAYAM இராஜபாளையம் 4563
RAMANATHPURAM இராமநாதபுரம் 4567
RAMESHWARAM இராமேஸ்வரம் 4573
RANIPET இராணிப்பேட்டை 4172
RASIPURAM இராசிபுரம் 4287
SALEM சேலம் 427
SANKAGIRI சங்ககிரி 4283
SANKARAN KOIL சங்கரன்கோவில் 4636
SATHIYAMANGALAM சத்தியமங்கலம் 4295
SIVAGANGA சிவகங்கை 4575
SRIPERUMPUDUR ஸ்ரீபெரும்பதூர் 44
SRIVAIKUNDAM ஸ்ரீவைகுண்டம் 4630
TENKASI தென்காசி 4633
THANJAVUR தஞ்சாவூர் 4362
THENI தேனீ 4546
THIRUMANGLAM திருமங்கலம் 4549
THIRURAIPOONDI திருத்துறைப்பூண்டி 4369
THURAIYURE துறையூர் 4327
TINDIVANAM திண்டிவனம் 4147
TIRUCHENDUR திருச்செந்தூர் 4639
TIRUCHENGODE திருச்செங்கோடு 4288
TIRUNELVELLI திருநெல்வேலி 462
TIRUPATHUR திருப்பத்தூர் 4577
TIRUPATTUR திருப்பத்தூர் (வேலூர்) 4179
TIRUPUR திருப்பூர் 421
TIRUTTANI திருத்தணி 44
TIRUVANNAMALAI திருவண்ணாமலை 4175
TIRUVARUR திருவாரூர் 4366
TIRUVELLORE திருவள்ளூர் 44
TIRUVETTIPURAM திருவெட்டிபுரம் 4182
TRICHY திருச்சி 431
TUTICORIN தூத்துக்குடி 461
UDUMALPET உடுமலைப்பேட்டை 4252
ULUNDURPET உளுந்தூர்ப்பேட்டை 4149
USILIAMPATTI உசிலம்பட்டி 4552
UTHANGARAI ஊத்தங்கரை 4341
VALAPADY வாழப்பாடி 4292
VALLIYOOR வள்ளியூர் 4637
VANIYAMBADI வாணியம்பாடி 4174
VEDASANDUR வேடசந்தூர் 4551
VELLORE வேலூர் 416
VELUR வேலூர் (நாமக்கல்) 4268
VILATHIKULAM விளாத்திக்குளம் 4638
VILLUPURAM விழுப்புரம் 4146
VIRUDHACHALAM விருத்தாச்சலம் 4143
VIRUDHUNAGAR விருதுநகர் 4562
WANDIWASH வந்தவாசி 4183
YERCAUD ஏற்காடு 4281

அலெக்சாண்டர்

அலெக்சாண்டர்

         
Alexander


அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் “கிரானிக்ஸ்’ நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் “அலெக்சாண்டரியா’ என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர். எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து போரிட்டது… தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது… ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.

Nandri: தமிழ் முகநூல்

Thursday, November 1, 2012

How to import data from Excel to SQL Server


How to import data from Excel to SQL Server


Introduction


In this article you will see how to use the SQL Server import an MS Excel file on your computer to a database on your SQL Server.


Open The Sql Query window select the database and Type

create database samp

go
sp_configure 'show advanced options',1 
reconfigure with override 
go 
sp_configure 'Ad Hoc Distributed Queries',1 
reconfigure with override 
go
SELECT * into temptable
FROM OPENROWSET('Microsoft.Jet.OLEDB.4.0',
                'Excel 8.0;DATABASE=C:\Users\RAJU\Desktop\pincodes.xls;IMEX=1',
                'SELECT * FROM [Sheet1$]')

select * from temptable