Wednesday, August 7, 2013

Comments ஏன் எழுத வேண்டும்?


புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 11
  
நம்முடைய PROGRAM ஐ ஒருவருக்கு புரியவைக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான வாய்ப்பு COMMENTS எழுதுவது. அது என்னவென்று இங்கே பார்ப்போம். 

//WE ARE GOING TO LEARN THE IMPORTANCE OF COMMENTS
இங்கே 
// என்கின்ற SYMBOL ளுக்கு அடுத்து இருப்பவை COMMENTS ஆகும்

நாம் எழுதும் program மில் இடம்பெறும் குறிப்புகளைத்தான் comments என்கிறோம். இந்த குறிப்புகளை compiler கண்டுகொள்ளாது. எனவே இது நமது program size ஸையோ அல்லது performance ஸையோ பாதிக்காது. 

புரியும்படி சொல்வதானால் முதலில் நீங்கள் ஒரு Program ஐ எழுதி compile செய்து பாருங்கள் ஒரு executable (.exe) file கிடைக்கும். அதனுடைய size என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள். அடுத்து program line களுக்கிடையில் comment களை எழுதி மீண்டும் compile செய்யுங்கள், இப்பொழுதும் ஒரு executable (.exe) file கிடைக்கும். இதனுடைய size என்னவென்று பாருங்கள். இரண்டு size களுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்காது. 

இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால், உங்களுடைய comment ஆனது ஒரு Programmer உங்கள் code ஐ பார்க்கும் போது எதற்காக அந்த  வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை எளிதில் புரிய உதவியாய் இருக்கிறது என்பதுதான்.

ஒவ்வொரு PROGRAMMING LANGUAGE லும் ஒவ்வொரு விதமான Comment syntax இருக்கும்.

உதாரணத்திற்கு
// YOUR COMMENTS இது ஒரு வரி comment 

REM YOUR COMMENTS இது ஒரு வரி comment

{
 YOUR COMMENTS START HERE 
இந்த { } symbol ஐ பயன்படுத்தி பல வரிகளில் நம்மால் Comment எழுத முடியும்.  YOUR COMMENTS END HERE 
}

/*  YOUR COMMENTS START HERE 
இந்த /* */ symbol ஐ பயன்படுத்தி பல வரிகளில் நம்மால் Comment எழுத முடியும். 
YOUR COMMENTS END HERE  */
' YOUR COMMENTS இது ஒரு வரி comment
முதலியவை பொதுவாக Programming language களில் காணப்படும் Comments Syntax ஆகும்.

எதற்காக Comment எழுத வேண்டும்?

நமது Program மில் பல நூற்றுக்கணக்கான வரிகளை நாம் எழுதியிருப்போம். அவ்வாறு நாம் எழுதியதை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் எதற்காக இந்த code எழுதப்பட்டிருக்கிறது என்கிற விசயம் ஞாபகத்துக்கு வராது. எழுதிய நமக்கே இப்படியென்றால் நமது code ஐ இன்னொருவர் எப்படி புரிந்து கொள்வார்? எனவேதான் முக்கியமான சில இடங்களில் comment எழுதுவது அவசியமாகிறது.

உதாரணத்திற்கு

ic := yr * 3 * 12

இது எதற்காக எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் கணிக்க இயலுமா? கஷ்டம் தானே?

சரி இப்பொழுது சொல்லுங்கள்...
//Convert yard into inches
ic := yr * 3 * 12

இப்பொழுது புரிந்தது அல்லவா?

ஒவ்வொரு வரிக்கும் Comment எழுதவேண்டுமா?

அப்படி எழுதக்கூடாது. சில வரிகளை பார்த்த மாத்திரத்திலேயே அதன் அர்த்தம் விளங்கிடும். அதற்கெல்லாம் comment எழுதினால் அது நமக்கே எரிச்சல் கொடுக்கும். கஷ்டமான விசயங்கள் மற்றும் முக்கியமானவைகளுக்கு மட்டும் comment எழுதுவது நல்லது.

உதாரணத்திற்கு
num2 := num1 + 1

இதை பார்த்தவுடனேயே நமக்கு விளங்கிவிடுவதால் இதற்கெல்லாம் comment எழுத அவசியம் இல்லை.

இறுதியாக நீங்கள்  எழுதிய comment களை நீங்களே ஒருமுறையாவது படித்து பாருங்கள். இது உங்கள் comment ன் தரத்தை உயர்த்த பிரயோஜனமாக இருக்கும்.

0 comments:

Post a Comment