This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, June 14, 2012

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!


மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!

 

இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கைவிடமுடியாது தவிக்கிறோம்.
அவ்வாறான செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன,
மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர்.


மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.




போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
போனில் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக அவசியமான நேரங்களில் மட்டும் மொபைல் ஐ பயன்படுத்துங்கள்.


உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.


சிறுவர்களின் உடல் மற்றும் மூளையே பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கவும். குழந்தைகளுக்கு அருகில் இருந்து மொபைலை பயன்படுத்தவேண்டாம். முக்கியமாக கர்ப்பினிகளுக்கு அருகில் மொபைலில் பேசுவதை தவிர்க்கவும்.


மொபைல் போன் உறைகள் போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவேளுறைகள் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.


சந்தையில் மலிவாக கிடைக்கும் சீன தயாரிப்பு மொபை போன்கள், ஏனையவற்றை காட்டிலும் அதிக கதிர்வீச்சை கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.




இவைதவிர, போக்குவரத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பாவிப்பது உடனடி மரணத்தை விளைவிக்க கூடியது.




Thanks to www.tamilcloud.com