This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, November 8, 2012

அலெக்சாண்டர்

அலெக்சாண்டர்

         
Alexander


அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் “கிரானிக்ஸ்’ நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் “அலெக்சாண்டரியா’ என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர். எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து போரிட்டது… தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது… ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.

Nandri: தமிழ் முகநூல்

Thursday, November 1, 2012

How to import data from Excel to SQL Server


How to import data from Excel to SQL Server


Introduction


In this article you will see how to use the SQL Server import an MS Excel file on your computer to a database on your SQL Server.


Open The Sql Query window select the database and Type

create database samp

go
sp_configure 'show advanced options',1 
reconfigure with override 
go 
sp_configure 'Ad Hoc Distributed Queries',1 
reconfigure with override 
go
SELECT * into temptable
FROM OPENROWSET('Microsoft.Jet.OLEDB.4.0',
                'Excel 8.0;DATABASE=C:\Users\RAJU\Desktop\pincodes.xls;IMEX=1',
                'SELECT * FROM [Sheet1$]')

select * from temptable




Wednesday, October 31, 2012

உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!


உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!!



hide-folder
          எதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி Folder-ஐ மறைத்து வைக்கும் போது மிகவும் சிரமம்தான், அது மட்டும் இல்ல அப்படி மறைத்ததை எல்லா தடவையும் Recover பண்ணமுடியறதில்லீங்க....

நமது கணினியில் நமக்கென்று ஒரு Folder ஐ பாதுகாப்பாக வைக்க மிகவும் சிறந்த வழி இது !!!

நீங்க பண்ணவேண்டியது ரொம்ப சிம்பிள் ஸ்டெப்

1.Start ஐ கிளிக் பண்ணி Run window வை ஓபன் பண்ணுங்க.
2.CMD  இன்னு  பண்ணி enter key ஐ press  பண்ணுங்க   .
3.அதுல எப்பவுமே ( C:\) இப்படித்தான் இருக்கும்
4.நீங்க எந்த folder ஐ மறைகனுமோ அந்த folder இருக்கிற  டிரைவ்க்கு ( Ex D:\ or E:\) மாறுங்க
5.இந்த கமெண்ட் ஐ type பண்ணுங்க E:/>attrib +h +s Folder Name ( Folder name = மறைக்க வேண்டிய folder உடைய பெயர் )
6.இப்ப Folder மறைஞ்சிடும்.

7.ஹைடு பண்னத திரும்ப வர வைக்க இந்த கமென்ட்ஐ யூஸ் பண்ணுங்க
E:/>attrib -h -s Folder Name

புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள்



புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள்

         


                     தொலைக்காட்சிகளிலும் வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள் பொதுமக்களில் பலருக்கு இன்றளவும் விளங்கமலேயே இருக்கின்றது. பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :


                    ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும். 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள். 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.